தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திறக்காத பாலத்தில் விபத்து மீனவர் 2 பேர் உயிரிழப்பு

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர் 2 பேர் உயிரிழப்பு

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர் 2 பேர் உயிரிழப்பு


ADDED : ஜன 15, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழவேற்காடு: பழவேற்காடு, பசியாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி, 46; மீனவர். இவர், நேற்று முன்தினம் இரவு பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பழவேற்காடு - பசியவாரம் இடையே புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, 'யமஹா' இருசக்கர வாகனம் மோதியது.

இதில், சிகாமணி பலத்த காயமடைந்தார். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சாட்டன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்துபாண்டியன், 24, என்பவர், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சிகாமணியை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 2:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us