/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மலைப்படிகளில் அமைத்த கூரைகளால் விபத்து அபாயம்
/
மலைப்படிகளில் அமைத்த கூரைகளால் விபத்து அபாயம்
ADDED : ஜன 18, 2025 02:18 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற, படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, மலைப்படிகளில் இருந்து தேர்வீதிக்கு செல்லும் இடங்களில், கோவில் நிர்வாகம் சார்பில், தகடுகளால் கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
முறையாக பராமரிக்காததால், இவற்றில் சில தகடுகள் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் இரு தகடுகள் மட்டுமே உள்ளதால், பக்தர்கள் அங்கு கடக்கும் போது அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
காரணம், அந்த தகடுகளும் உடைந்து விழும் அபாயம் உள்ளதால், பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.
கோவில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கூரையில் சேதமடைந்த தகடுகளை அகற்றி, புதிதாக தகடுகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.