/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத பாலத்தில் விபத்து அபாயம்
/
பராமரிப்பு இல்லாத பாலத்தில் விபத்து அபாயம்
ADDED : நவ 23, 2024 01:49 AM

ஆர்.கே. பேட்டை:ஆர்கே பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வெள்ளத்தூர் ஓடை தர்கா அருகே, தரைப்பாலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேம்பாலமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த பகுதியில் போக்குவரத்து சிக்கல் தீர்ந்து வாகனங்கள் எளிதாக பயணிக்க வழி கிடைத்தது. இந்நிலையில் இந்த மேம்பாலம் தொடர் பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் இரண்டு ஓரத்திலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடக்க சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும்போது போதிய இடவசதி என்று விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி பாலத்தில் மண்டி கிடக்கும் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

