/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் குப்பை குவிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்
/
ஆரணி ஆற்றில் குப்பை குவிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்
ஆரணி ஆற்றில் குப்பை குவிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்
ஆரணி ஆற்றில் குப்பை குவிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்
ADDED : செப் 22, 2024 12:20 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வைரவன்குப்பம் கிராமம் அருகே ஆரணி ஆறு பயணிக்கிறது. இங்குள்ள ஆற்றுப்பகுதியில் வணிக வளாகங்கள்,தொழில் நிறுவனங்களில் குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன.
தினமும் டிராக்டர்களில் கொண்டு வந்து கொட்டி, பின் அவை தீவைத்து எரிக்கப்படுகிறது. குப்பையில் உள்ள பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட மக்காத பொருட்கள் எரியும்போது துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கிறது.
தொடர்ந்து இதே நிலை தொடர்வதால், ஆற்று பகுதி முழுதும் குப்பை மேடமாக மாற்றப்பட்டு வருகிறது. ரசாயன கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் ஆற்றில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. மேற்கண்ட பகுதியை நீர்வளத்துறை உடனடியாக ஆய்வு செய்து குப்பை கொட்டி எரிப்பதை தடுக்கவும், அச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.