/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொடிநாள் நிதி வசூலில் சாதனை: கலெக்டருக்கு பாராட்டு
/
கொடிநாள் நிதி வசூலில் சாதனை: கலெக்டருக்கு பாராட்டு
கொடிநாள் நிதி வசூலில் சாதனை: கலெக்டருக்கு பாராட்டு
கொடிநாள் நிதி வசூலில் சாதனை: கலெக்டருக்கு பாராட்டு
ADDED : ஜன 29, 2024 06:46 AM

திருவள்ளூர்: முன்னாள் படைவீரர் நலனுக்காக, கொடிநாள் வசூலில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற, திருவள்ளூர் கலெக்டருக்கு கவர்னர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்ற வீரர்களின் நலனிற்காக, டிச.,7ல் முப்படை வீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளில் பணிபுரியும் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தோரை காப்பது நமது கடமை என்பதை உணர வைப்பதே கொடிநாள் அனுசரிப்பதின் நோக்கம்.
மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் படைவீரர் நலனிற்காக கொடிநாள் நிதி வசூலிப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 2022ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொடிநாள் நிதி இலக்கு, 5.14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இதில், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, 5.34 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. தமிழகத்திலேயே அதிகளவில் கொடிநாள் நிதி வசூலித்ததற்காக, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கருக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாராட்டி, சுழற்கோப்பை வழங்கினார்.