/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பெஞ்சல்' புயல் நிவாரணம் வழங்க நடவடிக்கை
/
'பெஞ்சல்' புயல் நிவாரணம் வழங்க நடவடிக்கை
ADDED : ஏப் 26, 2025 09:38 PM
திருவள்ளூர்:'பெஞ்சல்' புயல் நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-- - 17ம் ஆண்டு சம்பா பருவத்தில், 1,80,451 விவசாயிகளுக்கு 387.56 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 2024-- 25ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு தற்பொழுது, முதல் தவணையாக 3,352 விவசாயிகளுக்கு 7.81 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.
இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டிருந்த 7,789 விவசாயிகளுக்கு 14.68 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. 'பெஞ்சல்' புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

