நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, அகரம்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஞானமூர்த்தி. இவரது மகன் சரத்குமார், 24. பாகல்மேடு பகுதியில் டிவி மெக்கானிக் சென்டர் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம், 21ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஞானமூர்த்தி வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, சரத்குமாரை தேடி வருகின்றனர்