தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த அறிவுரை
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த அறிவுரை
ADDED : மே 13, 2026 03:35 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், தொழிலக பாதுகாப்பு துறை சார்பில் நடந்த கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
சென்னை, கிண்டியில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் நேற்று, தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஜவஹர் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை இயக்குநர் ஹேமலதா, மருத்துவர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் மனித வளம் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தொழிற்சாலை கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நிலையான இயக்க நடை முறைகளை கடைப்பிடித்தல், தொழிற்சாலை விபத்து தடுப்பு உள்ளிட்டவற்றை தொழிற்சாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அதன் மூலம், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற் படுத்துவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.
