/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டு சாவடியில் பெற்ற படிவம் கணினியில் பதிவு செய்ய அறிவுரை
/
ஓட்டு சாவடியில் பெற்ற படிவம் கணினியில் பதிவு செய்ய அறிவுரை
ஓட்டு சாவடியில் பெற்ற படிவம் கணினியில் பதிவு செய்ய அறிவுரை
ஓட்டு சாவடியில் பெற்ற படிவம் கணினியில் பதிவு செய்ய அறிவுரை
ADDED : டிச 28, 2025 06:34 AM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையத்தை கலெக்டர் பார்வையிட்டு, கணினியில் உடனடியாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான, ஓட்டுச் சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், பிற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர, விண்ணப்பம் பெறப்பட்டது.
இந்த சிறப்பு முகாம் நடைபெறும் உதவி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர், ஆவடி சட்டசபை தொகுதிகளுக்கு உள்ளிட்ட பகுதிகளில், ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களிடம் பெறப்பட்ட படிவங்களை, கணினிமயமாக்கல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அம்பத்துார் தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகத்தில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் ஓட்டுச் சாவடி நிலைய மேற்பார்வையாளர்களுடன், ஆலோசனை நடத்தி, அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

