/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்க அறிவுரை
/
தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்க அறிவுரை
ADDED : ஏப் 03, 2025 07:18 PM
திருவள்ளூர்:பொதுமக்களுக்கு கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆரணி மற்றும் திருமழிசை பேரூராட்சிகளில், அம்ருத் 2.0 திட்டம் செயல்பட்டு வருகிறது. அப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கோடை காலம் என்பதால் 'சின்டெக்ஸ் டேங்க்' அமைத்து சீரான குடிநீர் வழங்கவும், வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கவும், தயார் நிலையில் இருக்க வேண்டும் என, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

