/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க அறிவுரை
/
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க அறிவுரை
ADDED : டிச 28, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்வித் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், மாவட்டம் முழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சீரான பாடத்திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.