/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல்போன் தவிர்க்க மாணவருக்கு ஆலோசனை
/
மொபைல்போன் தவிர்க்க மாணவருக்கு ஆலோசனை
ADDED : அக் 04, 2024 08:41 PM
திருவள்ளூர்:திருவள்ளூர், டி.ஆர்.பி.சி., மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை நடந்தது. தலைமை ஆசிரியர் ராமமோகன் தலைமை வகித்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
பள்ளி பருவத்தில் தான், கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள முடியும். படிக்கும் வயதில், கல்வியை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது.
மாணவர்கள் தீய பழக்கவழக்கங்களை நாடக் கூடாது. தினமும், மொபைல்போன் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. அந்த பழக்கத்தை மாணவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
மாறாக, மாலை நேரத்தில் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, சத்தான உணவுகளை உண்டு, ஆரோக்கியத்தை பேண வேண்டும். இரவில் நன்றாக தூங்கினால் தான், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் வாயிலாக, கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் முன்னேற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.