ADDED : செப் 05, 2026 03:51 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக தொழிற்சாலைகளில், மாசு ஏற்படுத்தும் வகையை சேர்ந்த பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதால், சிப்காட் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், மரகன்றுகள் நடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தினர்.
சிப்காட் வளாகத்தில் உள்ள 1.50 ஏக்கள் பரப்பளவில், 1,000 மரகன்றுகளை நட்டனர். ‘நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்து, காடு வளர்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம்’ என, அவர்கள் தெரிவித்தனர்.
