/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அகத்தீஸ்வரர் கோவில் குளம்
/
6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அகத்தீஸ்வரர் கோவில் குளம்
6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அகத்தீஸ்வரர் கோவில் குளம்
6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அகத்தீஸ்வரர் கோவில் குளம்
ADDED : ஜன 02, 2024 11:12 PM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு நுழைவு வாயில் அருகே கோவில் குளம் உள்ளது.
இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் பக்தர்கள் குளத்தில் புனித நீராடிய பின் அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குளம் நிரம்பியது. அதன் பின் கடந்த மாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழை பெய்ததால், அகத்தீஸ்வரர் கோவில் குளம் முழுமையாக நிரம்பியு உள்ளன. தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.