/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூலத்தாங்கல் ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரை
/
மூலத்தாங்கல் ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரை
ADDED : டிச 28, 2024 01:44 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மூலத்தாங்கல் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பு கொண்ட பாசன ஏரி அமைந்து உள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீர் விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பதற்கும் உதவியாக உள்ளது.
விவசாய நிலங்களை ஒட்டி ஏரி அமைந்திருப்பதால், அங்குள்ள ஆழ்துளை கிணறுகளும் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் ஏரி உரிய பராமரிப்பு இன்றி உள்ளது.
ஏரி முழுதும், முள்செடிகள் மற்றும் ஆகாயத்தாமரை சூழ்ந்து உள்ளது. இதனால் ஏரி நீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தினால் கூடுதல் மழைநீரை சேமித்து வைக்க முடியும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தேங்கியுள்ள மழைநீரை பாதுகாக்கவும், கோடையின்போது, துார்வாரி ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.