ADDED : ஜன 25, 2025 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் வாயிலாக, சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணியில், 50 லட்சம் ரூபாய் செலவில், துணை வேளாண் விரிவாக்க மையம் நிறுவப்பட்டது.
அதன் திறப்பு விழா, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. விழாவில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், எம்.எல்.ஏ.,க்கள் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், திருவள்ளூர் வேளாண்மை இணை இயக்குனர் கலாதேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது, 12 பயனாளிகளுக்கு, மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

