/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலையில் மின்மோட்டார்கள் வேளாண் பொறியியல் துறை அறிவிப்பு
/
மானிய விலையில் மின்மோட்டார்கள் வேளாண் பொறியியல் துறை அறிவிப்பு
மானிய விலையில் மின்மோட்டார்கள் வேளாண் பொறியியல் துறை அறிவிப்பு
மானிய விலையில் மின்மோட்டார்கள் வேளாண் பொறியியல் துறை அறிவிப்பு
ADDED : செப் 25, 2024 06:33 AM
திருத்தணி : திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இந்நிலையில் வேளாண் பொறியியல் துறையினர் விவசாயிகளுக்கு மானிய விலையில், மின்மோட்டார்கள், பவர் டில்லர், பவர் வீடர் மற்றும் டிராக்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மேலும் ஏர் உழுவதற்கு டிராக்டர், நெல் அறுவடை மற்றும் கரும்பு அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள் குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படுகிறது.
இது குறித்து திருத்தணி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேல் கூறியதாவது: சிறுகுறு விவசாயிகளுக்கு, 5 எச்.பி., 7 எச்.பி., மின்மோட்டார்களுக்கு அதிகபட்சமாக, 15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
அதே பவர் டில்லர் கருவிக்கு, 50 சதவீதம் மானியமாக, 1.20 லட்சம் ரூபாயும், பவர் வீடர் கருவிக்கு, 60 சதவீதம் மானியாக, 72 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட மானியங்கள் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் கணினி சிட்டா, ரேஷன் கார்டு மற்றும் சிறு விவசாயி அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பம் எழுதி புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவசாயிகளின் பணிகளுக்கு டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் குறைந்த வாடகைக்கு கிடைக்கிறது. இதற்கு தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.