/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகத்துார் கூவம் ஆறு ஆக்கிரமித்து விவசாயம்
/
அதிகத்துார் கூவம் ஆறு ஆக்கிரமித்து விவசாயம்
ADDED : ஏப் 28, 2025 11:30 PM

கடம்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது கூவம் ஆறு.
இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக, சென்னையில் கடலில் கலக்கிறது.  கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
பல இடங்களில், கூவம் ஆற்றில், மணல் திருட்டும் அமோகமாக நடந்து வருகிறது. மணல் திருட்டு மற்றும் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், மணல் திருட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

