தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்


ADDED : ஏப் 06, 2026 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்;திருவள்ளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் பி.வி.ரமணா நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, போட்டியிடுகிறார். அவர் நேற்று, கூட்டணி கட்சியினருடன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின் பி.வி.ரமணா கூறியதாவது:

திருவள்ளூர் தொகுதியில் கடந்த, பத்து ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும், போதை பொருள், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில், 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் நாட்கள் பணி வழங்குவது, தொகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றை முன்னிறுத்தி, பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஒற்றை விரல் புரட்சி நடக்கும், 23ம் தேதி, வாக்காளர்களின் அமோக ஆதரவோடு, அ.தி.மு.க., வெற்றி பெற்று, தமிழகத்தில், ஆட்சியை பிடிக்கும். ஆட்சி அமைந்த மூன்று மாதத்திற்குள், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவர் அணி செயலர் வேணுகோபால், நகர செயலர் கந்தசாமி, பா.ம.க., பாலயோகி, பா.ஜ., பன்னீர்செல்வம், அ.ம.மு.க., ராஜேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us