அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்' கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்' கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 03, 2026 07:24 PM

ஊத்துக்கோட்டை:'கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன்' என அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் உறுதியளித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம், தண்டலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., மற்றும் த.மா.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எல்லாபுரம், பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கே ற்றனர்.
பின் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், வேட்பாளர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், ' தி.மு.க., நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்கி, தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. கஞ்சா புழக்கம் அதிகரித்து, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது' என்றார்.
பின் அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் பேசுகையில், 'ஊழல் தி.மு.க., அரசை அகற்றி, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியை முதல்வராக்க உறுதியேற்று, அவர் மூலம் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்' என்று பேசினார். முன்னதாக, அ.தி.மு.க., வேட்பாளருக்கு மலர் மாலை, சால்வை அணிவித்து தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
