/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : செப் 24, 2024 06:43 AM

திருத்தணி: திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் கமலா தியேட்டர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, ரியல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது.
இதில் எச்.ஐ.வி மற்றும் பால்வினை தொற்று குறித்து கிராமிய கலைகள் மூலமாக வரிஸ் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் மேளத்துடன் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்தணி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பாளர் பத்மாவதி, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், இந்திய சமுதாய நல நிறுவனத்தின் மாவட்ட வள மேலாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏழுமலை, களப்பணியாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.