/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
/
நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:47 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நலிவடைந்த விளையாட்டு வீரர்கள், நடப்பு 2025-26ம் நிதியாண்டில் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஏப்ரல் ௩ம் தேதி 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மாத வருமானம், 6,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்றும் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வரும் 31ம் தேதிக்குள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.