/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏர் இந்தியா விமானங்கள் அதிகரிப்பு
/
ஏர் இந்தியா விமானங்கள் அதிகரிப்பு
ADDED : நவ 26, 2024 06:33 AM
சென்னை: சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குளிர் கால அட்டவணையின் ஒரு பகுதியாக சென்னை, மதுரை, திருச்சியில் இயங்கும் விமான சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.வாரம் 107 விமானம் இயக்கப்படும் நிலையில், அதை 140 விமானங்களாகஅதிகரிக்கப்படுகிறது.
டில்லி, இந்துார், கண்ணுார், கோழிக்கோடு, லக்னோ, மங்களூரு, மும்பை, ஸ்ரீநகர் என உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கும், அபுதாபி, சார்ஜா, துபாய் என சர்வதேச நாடுகளுக்கும் நேரடி, இணைப்பு விமான சேவைகளை கூடுதலாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இண்டிகோ நிறுவனம், சென்னையில் இருந்து ஆமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், கொச்சி, டில்லி, துர்காபூர், இந்துார், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஷீரடி, சிவ்மோகா, சூரத், ராய்ப்பூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களின் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.