/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விமான நிலைய பயணியர் சேவை அடிப்படை பயிற்சி
/
விமான நிலைய பயணியர் சேவை அடிப்படை பயிற்சி
ADDED : ஜன 11, 2025 08:02 PM
திருவள்ளூர்:'தாட்கோ' வாயிலாக, விமான நிலைய பயணியர் சேவை அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'தாட்கோ' வாயிலாக, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, விமான நிலைய பயணியர் சேவை குறித்த அடிப்படை படிப்பு மற்றும் பயிற்சி சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அளிக்கப்பட உள்ளது.
இதன்படி, விமான நிலைய பயணியர் சேவை, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விமான பயண முன்பதிவு உள்ளிட்ட பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் வாயிலாக, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பயிற்சிக்கான காலம் ஆறு மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவு தொகை 95,000 ரூபாயும், 'தாட்கோ' வாயிலாக மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

