ADDED : ஜன 27, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் சிலர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் நேற்று, போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கேசவன், 48, என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
