ADDED : அக் 21, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த மத்துார் ரயில்வே கேட் அருகே, திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மத்துார் டாஸ்மாக் கடையில் இருந்து, 40 மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடத்தி வந்தார். அப்போது, அவரை மறித்த ரோந்து போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், முருக்கம்பட்டைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், 47, என்றும், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரிந்தது. முனிகிருஷ்ணனை கைது செய்த போலீசார் விசாரிக் கின்றனர்.