ADDED : நவ 23, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம், போலீசார் சந்தேகத்தின்படி, விசாரணை நடத்தினர்.
அவர், ஆந்திராவில் இருந்து 15 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், அரக்கோணம் அடுத்த மோசூரைச் சேர்ந்த வேதகிரி, 35, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

