ADDED : ஜன 19, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக, மதுவிலக்கு டி.எஸ்.பி. கந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு போலீசார், கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, 96 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை கடத்தி வந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், 45, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

