/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகில இந்திய அஞ்சல் ஹாக்கி: தமிழகம் - கர்நாடகா மோதல்
/
அகில இந்திய அஞ்சல் ஹாக்கி: தமிழகம் - கர்நாடகா மோதல்
அகில இந்திய அஞ்சல் ஹாக்கி: தமிழகம் - கர்நாடகா மோதல்
அகில இந்திய அஞ்சல் ஹாக்கி: தமிழகம் - கர்நாடகா மோதல்
ADDED : பிப் 15, 2024 11:55 PM

சென்னை:இந்திய அஞ்சல் துறையின், 35வது அகில இந்திய அஞ்சல் துறை ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்து வருகிறது.
தமிழகம், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய ஐந்து அணிகள் 'லீக்' முறையில் மோதி வருகின்றன. நான்காவது நாளான நேற்று, கடைசி இரண்டு 'லீக்' சுற்றுகள் நடந்தன.
காலை 8:00 மணிக்கு நடந்த முதல் போட்டியில், ம.பி., மற்றும் ஒடிசா அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், ம.பி., அணி, 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், ம.பி., வீரர் மும்தாஜ் உதின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர்ந்து, 9:30 மணிக்கு நடந்த மற்றொரு ஆட்டத்தில், தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அதில், தமிழக அணி, 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் பரத்ராஜ் சிறந்த ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
அனைத்து லீக் சுற்றுகள் முடிவில், நடப்பு சாம்பியனான கர்நாடகா மற்றும் தமிழக அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி, இன்று மதியம் 2:00 மணிக்கும், தொடர்ந்து நிறைவு விழா, மாலை 4:00 மணிக்கும் நடக்கிறது.