sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநெல்லுார் சிப்காட் கூடுதல் சாலை வசதிக்காக ஒதுக்கீடு...ரூ. 39 கோடி!:ஈகுவார்பாளையம் --- மாதர்பாக்கம் இடையே 4வழிச்சாலை

/

மாநெல்லுார் சிப்காட் கூடுதல் சாலை வசதிக்காக ஒதுக்கீடு...ரூ. 39 கோடி!:ஈகுவார்பாளையம் --- மாதர்பாக்கம் இடையே 4வழிச்சாலை

மாநெல்லுார் சிப்காட் கூடுதல் சாலை வசதிக்காக ஒதுக்கீடு...ரூ. 39 கோடி!:ஈகுவார்பாளையம் --- மாதர்பாக்கம் இடையே 4வழிச்சாலை

மாநெல்லுார் சிப்காட் கூடுதல் சாலை வசதிக்காக ஒதுக்கீடு...ரூ. 39 கோடி!:ஈகுவார்பாளையம் --- மாதர்பாக்கம் இடையே 4வழிச்சாலை


ADDED : செப் 15, 2024 12:59 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:புதிதாக துவங்கப்பட உள்ள மாநெல்லுார் சிப்காட் வளாகத்திற்கு கூடுதலாக சாலை வசதியை மேம்படுத்தும் நோக்கில், ஈகுவார்பாளையம் -- மாதர்பாக்கம் இடையே உள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகங்களை தொடர்ந்து, மாநெல்லுார் சிப்காட் வளாகம் துவங்கப்பட இருக்கிறது. அதற்காக மாநெல்லுார், வாணியமல்லி, மாதர்பாக்கம், சாணாபுதுார், சூரப்பூண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 4,385 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட உள்ளன. அவற்றில், 2,000 ஏக்கர் நிலங்கள், புறம்போக்கு நிலங்களாகும்.

மாநெல்லுார் சிப்காட் வளாகம் துவங்கும் முன்னரே, அதற்கான சாலை போக்குவரத்து வசதியை மேம்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை, சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கவரைப்பேட்டை -சத்தியவேடு மற்றும் கும்மிடிப்பூண்டி- மாதர்பாக்கம் ஆகிய இரு மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.

கவரைப்பேட்டை -சத்தியவேடு சாலையில் வாணியமல்லி கிராமம் வழியாக மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை இணைக்க, நான்கு கட்டடங்களாக நான்கு வழிச்சாலை அமைக்க, 151 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகள் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு சாலையான கும்மிடிப்பூண்டி -- மாதர்பாக்கம் சாலை, தற்போது இரு வழிச்சாலையாக உள்ளது. அந்த சாலையில், ஈகுவார்பாளையம் முதல் மாநெல்லுார் சிப்காட் வழியாக மாதர்பாக்கம் வரையிலான, 6 கி.மீட்டர் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதற்காக, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டது.

அடுத்த கட்டமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து ஈகுவார்பாளையம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் வழியாக ஈகுவார்பாளையம் கிராமத்தை இணைக்கும் சாலையை மேம்படுத்த இருப்பதாக நெடுஞ்சாலை துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‛கும்மிடிப்பூண்டி- மாதர்பாக்கம் நெடுஞ்சாலையில், ஈகுவார்பாளையம் முதல் பாதிரிவேடு வரையிலான இரு வழிச்சாலையை, 39 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசாணை வெளியானது. விரைவில் திட்ட மதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்படும். அடுத்த மூன்று மாத காலத்திற்குள் பணிகள் துவங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us