/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராம சாலைகளை புதுப்பிக்க ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு
/
கிராம சாலைகளை புதுப்பிக்க ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு
கிராம சாலைகளை புதுப்பிக்க ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு
கிராம சாலைகளை புதுப்பிக்க ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 06, 2024 07:34 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கிராமபுற சாலைகளை புதுப்பிக்க, ஒன்றிய நிதியில் இருந்து, 1.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர் மழையால், ஏற்கனவே சேதமடைந்து இருந்த கிராமப்புற சாலைகள், மேலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக இருந்தது. அதை புதுப்பிக்க, ஒன்றிய நிதியில் இருந்து, 1.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, ஈகுவார்பாளையம், சூரப்பூண்டி, மாநெல்லுார், பெரியஓபுளாபுரம், பெத்திக்குப்பம், சுண்ணாம்புகுளம், புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 26 ஊராட்சிகளில், சாலை புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அந்த நிதியில், ஈகுவார்பாளையம் கிராம தொடக்கப் பள்ளி கட்டடம், பூவலை கிராமத்தில் கல்வெட்டு, பெரியஓபுளாபுரம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை, திப்பம்பாளையம் கிராமத்தில் சுடுகாடு எரிமேடை, சுற்றுச்சுவர், சிந்தலகுப்பம் ஹவுசிங் போர்டு மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.