/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
/
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 01, 2025 10:44 PM

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம் காக்கவாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1929ம் துவக்கப்பட்ட இந்த பள்ளி, நுாறாண்டு கடந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 15க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் நுாற்றாண்டு விழாவில், தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். இதில், பள்ளியில் படித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
விழாவில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் பங்கேற்றனர்.