/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெ.சா.துறை இடத்தில் மரக்கன்று நட்டு அசத்தல்
/
நெ.சா.துறை இடத்தில் மரக்கன்று நட்டு அசத்தல்
ADDED : மார் 31, 2025 03:05 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் அருகே ஆறு குறுக்கிடுகிறது.
இந்த ஆற்றை கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, மாற்றுப்பாதையில் பாலம் கட்டப்பட்டது.
அதன்பின், பழைய சாலை கைவிடப்பட்டது. புதிதாக பாலம் கட்டப்பட்ட பின், இந்த பகுதியில் சாலை வளைவாக திருப்பத்துடன் அமைந்தது.
நேரான பாதை கைவிடப்பட்டு பயனின்றி கிடந்தது. 1980ம் ஆண்டுகளில், இங்கு யூகலிப்டஸ் தோப்பு இருந்தது. அந்த தோப்பு அழிந்த பின், ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வந்தது.
தற்போது, அங்கிருந்து குப்பை அகற்றப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை துறை சார்பில், 7 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பாலத்தின் வடக்கு கரையிலும், நெடுஞ்சாலைத் துறைக்கு உரிய இடத்தில் தோப்பு ஏற்படுத்த வேண்டும்.
இதே சாலையில், அப்பல்ராஜிகண்டிகை தரைப்பாலம் அருகே, கர்லம்பாக்கம் தரைப்பாலம் அருகே என, நெடுஞ்சாலைத் துறைக்கு உரிய இடத்தில் தோப்புகள் ஏற்படுத்தி, அந்த இடங்களை பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.