/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் நேரடி சேர்க்கை
/
அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் நேரடி சேர்க்கை
ADDED : அக் 26, 2024 07:53 PM
திருவள்ளூர்:அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,ல் மாணவியர் சேர்க்கை வரும் 30 வரை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அம்பத்துார் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில், கடந்த, 1 முதல் வரும் 30 வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி; 12 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதோர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
பயிற்சியில் சேருவோருக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், அனைத்து சான்றிதழ், சேர்க்கை கட்டணம் 235 ரூபாய் உடன், முதல்வரை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 98407 56210, 94440 17528 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.