/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உதவியாளர் நேர்முக தேர்வு
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உதவியாளர் நேர்முக தேர்வு
ADDED : ஜூலை 18, 2025 10:39 PM
திருவள்ளூர்:ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு, நாளை ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் செல்வமுத்து குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - 25, மருத்துவ உதவியாளர் - 25 என, மொத்தம் 50 பேர் தேவைப்படுகின்றனர். அந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு, திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்சி., நர்சிங் படித்த 19 - 30 வயதிற்கு உட்பட்ட ஆண் - பெண் இருபாலரும் பங்கேற்கலாம். ஓட்டுநர் பணிக்கு, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 24 - 35 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கலாம்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு, மாதம் 16,200 ரூபாயும், ஓட்டுநருக்கு 16,000 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். காலை 10:00 மணிக்குள், அனைத்து சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 73974 44141, 87544 35247 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.