தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அம்மன் தாலிச்சரடை திருடியோருக்கு வலை

அம்மன் தாலிச்சரடை திருடியோருக்கு வலை

அம்மன் தாலிச்சரடை திருடியோருக்கு வலை


ADDED : நவ 29, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதட்டூர்பேட்டை: ஊருக்கு வெளியே உள்ள கங்கையம்மன் கோவிலில், அம்மனின் தாலிச்சரடை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை அடுத்த நொச்சிலி கிராமத்தில், ஊருக்கு வெளியே கங்கையம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில், நேற்று (நவ.,28) நள்ளிரவு, கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அம்மனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தாலிச்சரடை திருடிச் சென்றுள்ளனர்.

இதே கோவிலில், சில மாதங்களுக்கு முன், உண்டியலை உடைத்து திருட்டு நடந்திருந்தது. அப்போது, கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ‘சி.சி.டி.வி’ கேமராவில், ‘ஹோண்டா டியோ’ இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த பதிவுகளை வைத்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு அம்மன் தாலிச்சரடை திருடிச் சென்றோர், கோவிலில் இருந்த ‘சி.சி.டி.வி’ கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவியையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதனால், இந்த திருட்டில் ஈடுபட்டோரின் கைரேகை பதிவுகளை வைத்தும், மோப்ப நாய் உதவியுடனும், பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us