/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் அவசியம்
ADDED : செப் 20, 2024 07:55 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், தினமும், 100க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
கர்ப்பிணியர் மகப்பேறுவிற்காக தொடர் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு வருகின்றனர்.
இங்கு ஒரே ஒரு மருத்துவர் இருப்பதால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிகிச்சைக்கு வந்திருந்த கிராமவாசிகள், 'இங்குள்ள ஒரே ஒரு மருத்துவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள், கர்ப்பிணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
'இங்கு கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் கர்ப்பிணியர் மருத்துவ பரிசோதனைக்கு வரும், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் கூடுதல் மருத்துவர் இருக்க வேண்டும்.
'அப்போதுதான் மற்ற நோய் பாதிப்புகளுடன் வருபவர்களுக்கும், கர்ப்பிணியருக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.
'மேலும் ஈ.சி.ஜி., ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் இல்லை. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' எனக்கூறி முறையிட்டனர்.
அதையடுத்து சுகாதாரத்துறையினரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்து சென்றார்.