/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுத்தம் செய்யாத குடிநீர் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயம்
/
சுத்தம் செய்யாத குடிநீர் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயம்
சுத்தம் செய்யாத குடிநீர் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயம்
சுத்தம் செய்யாத குடிநீர் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயம்
ADDED : ஜன 20, 2024 11:21 PM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம், வி.கே.புரம் ஊராட்சிக்குட்பட்ட பொந்தலா கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன், பொந்தலாகண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை ஊராட்சி நிர்வாகம் கட்டி அதன் மூலம் தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காததால், குடிநீர் தொட்டியின் மேல்தளம் சிமெண்ட் தளம் பெயர்ந்தும், ஏணிப்படிகளும் பழுதடைந்துள்ளன. இதனால் கடந்த ஆண்டுகளாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி அதே இடத்தில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் பல முறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.

