/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா
/
சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா
ADDED : பிப் 22, 2024 11:15 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 2021- 22ம் நிதியாண்டில், சிந்தலகுப்பம் கிராமத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், பூங்காவும் அதற்கான வேலியும், பூங்காவிற்குள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பின்றி, அந்த பூங்கா தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. பல இடங்களில் புதர்கள் மண்டியுள்ளன. ஊராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரித்து, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.