தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிடங்காக மாறிய பழமையான நுாலகம்: வாசகர்கள் அதிருப்தி

 கிடங்காக மாறிய பழமையான நுாலகம்: வாசகர்கள் அதிருப்தி

 கிடங்காக மாறிய பழமையான நுாலகம்: வாசகர்கள் அதிருப்தி


ADDED : ஏப் 24, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: வங்கனூரில் செயல்பட்டு வந்த பழமையான நுாலக கட்டடம், தற்போது குப்பை வண்டிகளின் கிடங்காக மாறியுள்ளது. இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுார் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சின்ன குளக்கரையில், கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 1965ல், அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம், இந்த நுாலகத்தை திறந்து வைத்தார்.

நெசவாளர்கள் அதிகளவில் வசிக்கும் வங்கனுாரை சேர்ந்தவர்கள், ஓய்வு நேரத்தில் இந்த நுாலகத்தில் படித்து பயனடைந்து வந்தனர். குளக்கரையில் அமைதியான சூழலில் அமைந்திருந்த இந்த நுாலகத்தில் படித்த மாணவர்கள் பலரும், தற்போது உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாலக கட்டடம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அதன்பின், பராமரிப்பின்றி சீரழிந்து கிடந்தது. தற்போது, முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டு, ஊராட்சியின் குப்பை வண்டிகளை நிறுத்தி வைக்கும் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

அறிவை வளர்க்க உதவிய நுாலகம், இன்று குப்பை வண்டிகளின் கிடங்காக மாறியுள்ளதால், வாசகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, புதிதாக நூலகம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us