/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பறிமுதல் ஆந்திர நபர் கைது
/
குட்கா பறிமுதல் ஆந்திர நபர் கைது
ADDED : அக் 07, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தில், 13 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
மும்பையில் இருந்து திருத்தணி வழியாக, சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில்களில் போதை மாத்திரைகள் அதிகளவில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று, தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயிலில், வாலிபர் ஒருவர் 13 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தார்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த பிரசாத், 21, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.