/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவியிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 17 மாதம் சிறை
/
மாணவியிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 17 மாதம் சிறை
மாணவியிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 17 மாதம் சிறை
மாணவியிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 17 மாதம் சிறை
ADDED : ஜன 31, 2025 02:16 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே ஓடும் ரயிலில், இளம்பெண்ணிடம் மொபைல் போன், லேப்டாப் பறித்த வழக்கில், குற்றவாளிக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னையைச் சேர்ந்தவர் வர்ஷா, 23. இவர், ஆவடி ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவர், கடந்த 2023, மார்ச்சில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் நிலையத்தில், கல்லுாரிக்கு ரயிலில் சென்ற போது, அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை, மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.
இதுகுறித்து, மாணவி ஆவடி ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆவடி ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கல்லுாரி மாணவியிடம் லேப்டாப், மொபைல் போன் பறித்த நபர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமார், 32, என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கடந்த 2023, செப்டம்பர் 9ம் தேதி கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, நேற்று முன்தினம் வெளியானது.
இதில், திருவள்ளூர் நீதிமன்ற நீதிபதி பவித்ரா, சிவகுமாருக்கு 17 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதற்கான உத்தரவை, ஆவடி ரயில்வே போலீசார், சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

