/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி
ADDED : மார் 06, 2026 05:51 AM

ஆர்.கே.பேட்டை: தடுப்பு சுவர் இன்றி அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், அரசு தொடக்க பள்ளி அருகேயும், இந்திரா நகரிலும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் தலா, 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இதில், இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தின் நுழைவாயில் மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலின் பின்பகுதியில் பாழடைந்த நிலையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு வேறு வழியே இல்லை.
சுற்றிலும் செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. தற்போது இந்த குளத்தை ஒட்டி, அங்கன்வாடி மையத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. அந்த கழிப்பறையை ஒட்டி, 20 அடி ஆழத்தில் குளம் அமைந்துள்ளது.
இந்த ஆபத்தான சூழலில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குழந்தைகளுக்கு காற்றோட்டத்துடன் பாதுகாப்பான பகுதியில் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

