/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
ADDED : பிப் 05, 2026 07:12 AM
திருவள்ளூர்: காலமுறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 190 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், அரசு பணிகளில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், இரண்டு நாட்களாக தங்கள் பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரண்டாவது நாளாக, கலெக்டர் அலுவலகம் முன், மாவட்டத்தில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டு கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்ட 190 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின் மாலை விடுவித்தனர்.

