தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 08, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மூன்று நாட்களாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட 560 பேரை கைது செய்து, பின் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக நேற்று, 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us