/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 08, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: அங்கன்வாடி ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும்.
ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை, கலெக்டர் அலுவலகம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

