/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சல்பர்' பவுடர் மோசடி மேலும் ஒருவர் கைது
/
'சல்பர்' பவுடர் மோசடி மேலும் ஒருவர் கைது
ADDED : பிப் 01, 2025 01:03 AM

ஆவடி:அம்பத்துார் தொழிற்பேட்டையில், 'தி ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ்' என்ற பெயரில், 'சல்பர்' ரசாயன பவுடர் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்படுகிறது. கடந்த 2022ல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த ஈஸ்வர் ராம், 38, என்பவர் நடத்தி வரும் 'ஜஸ்நத்ஜி டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. துவக்கத்தில் வாங்கிய ரசாயன பவுடருக்கு, முறையாக பணம் செலுத்தி உள்ளார்.
ஆனால், கடந்த 2022 டிச., முதல் 2023 பிப்ரவரி வரையில், 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான 134 டன் 'சல்பர்' பவுடர் வாங்கி கொண்டு, பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து, நிறுவன மேலாளர் நாராயணன் என்பவர், கடந்த ஆக., 19ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், அந்த நிறுவனம் போலி ஜி.எஸ்.டி., எண் மற்றும் 'ஆதார் எண்' தயாரித்து, 'சல்பர்' பவுடர் வாங்கி சென்றது தெரியவந்தது.
ஜோத்பூர் சென்ற தனிப்படை போலீசார், ஈஸ்வர் ராமை கைது செய்து, கடந்த 25ம் தேதி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரவீன்குமார், 31, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.