/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'போக்சோ'வில் மேலும் ஒரு ஆசிரியை கைது
/
'போக்சோ'வில் மேலும் ஒரு ஆசிரியை கைது
ADDED : டிச 17, 2024 12:39 AM
பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்க பள்ளி ஒன்றில், 15 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த செங்கல்வராயன், 59, என்பவர், அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமையாசிரியர் செங்கல்வராயன், 'போக்சோ'வில், கடந்த 19ம் தேதி, கைது செய்யப்பட்டார். அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரமணியிடம், பாதிக்கப்பட்ட மாணவி, தலைமையாசிரியரின் நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆசிரியை ரமணி அது குறித்து நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமலும், தடுக்க முயற்சிக்காமலும் மறைத்ததால், ரமணியும் தற்போது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

