/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் தடுப்பு கலெக்டர் அறிவுரை
/
போதை பொருள் தடுப்பு கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 04, 2024 08:23 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர போதை பொருள் தடுப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், கடைகளில், வருவாய், காவல் மற்றும் உள்ளாட்சி துறையினர் கூட்டாய்வு நடத்தி, போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - திருவள்ளூர், தீபா - திருத்தணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.