/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தர்ப்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
தர்ப்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
தர்ப்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
தர்ப்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : ஏப் 25, 2025 09:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
சலபதி திருத்தணி: சிங்கராஜபுரம் ஏரி வரத்துக் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
லிங்கமூர்த்தி, திருத்தணி: நெல் கொள்முதல் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
ராமுலு, விஷ்ணுவாக்கம்: விஷ்ணுவாக்கத்தில் இருந்து நத்தகோயில் திப்பை செல்லும் சாலையை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.
முருகேசன், எல்லாபுரம்: வட மதுரை ஏரி மதகை சீர்படுத்த வேண்டும். பெரியபாளையம் ஏரியை துார் வார வேண்டும். களைக் கொல்லிகளால் பாதிப்பு குறித்தும், காட்டு பன்றிகள் தொல்லை ஏற்படுவதால் அதை தடுத்த நிறுத்த வேண்டும்.
மோகனகிருஷ்ணன், கும்மிடிபூண்டி: கீழ்முதலம்பேடு ஏரியில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
சம்பத், கும்மிடிபூண்டி: ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றினால், நீர் நிலைகளை காப்பாற்ற முடியும்.
மோகன்ராஜ், கைவண்டூர்: ஏரி பாசன கால்வாயினை சீரமைத்து தர வேண்டும்.
சீனிவாசன், மீஞ்சூர்: மழையினால் பாதிக்கப்பட்ட தர்பூசணி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஸ்ரீநாத், திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரவை பொருட்டு முன்கூட்டியே அக்டோபர் மாதம் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, துணை இயக்குநர் வேதவல்லி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

